அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச, விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய ஆட்சியின்போது, அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்டது. இதில், அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், கோத்தபய ராஜபக்ச முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, கோத்தபய ராஜபக்ச உள்ளிட்ட பலரிடமும் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கோத்தபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.