
சென்னையில் அரசு அனுமதி பெறாமல் இயங்கிய தனியார் பள்ளி விடுதியில், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து, விடுதி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனியார் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். விசாரணையில் அரசு அனுமதி பெறாமல் விடுதி இயங்கியது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு நாளை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்தன், விடுதி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.