
தற்போது மொபைல் போன்களுக்கான தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது சியோமி நிறுவனம். மிகவும் வேகமாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மொபைல்களுக்கும் சார்ஜ் ஏற்றக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சியோமி வயர்லெஸ் யுனிவர்சல் சார்ஜரில், டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் மற்றும் ஓவர்-வோல்டேஜ் ப்ரோடெக்ஷன் என நிறைய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அலுமினியம் அலாயில் மேல்பக்கம் மட்டும் சிலிகான் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சியோமி Mi மிக்ஸ் 2எஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் மாடல்களுக்கு அதிகபட்சமாக 7.5 வாட்ஸ் அவுட்புட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 9 மற்றும் இதர மொபைல்களுக்கு அதிகபட்சமாக 10 வாட்ஸ் வரையிலான அவுட்புட்டை வழங்குகிறது.
இந்த சாதனத்தில் ஸ்மார்ட்போன்களை சார்ஜிங் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும் வகையில் சார்ஜிங் தூரம் 4எம்எம் வரை விரிவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சார்ஜர் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.