
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பழமை வாய்ந்த மெஜெராத் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கொல்கத்தாவின் மெஜெராத் பகுதி ரயில்நிலையம் அருகில் உள்ள, 40 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. கடந்த சில தினங்களாக கொல்கத்தா பகுதியில் கனமழை ஏற்பட்ட நிலையில், திடீரென நடந்த இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை விபத்தில் சிக்கி சுக்குநூறாகின. இதனிடையே, விபத்துக்குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.