
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் தற்போது கனமழை தொடர்ந்து 24மணி நேரத்திற்கு மேலாக பெய்துவருகிறது. இதையடுத்து கோண்டா, குஷி நகர் மாவட்டங்களில், தலா 3 பேரும், மிர்சாபூரில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பரியாச், சீதாபூர், மீரட், எட்டா மாவட்டங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சிலர் உயிரிழந்துள்ளதாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் உத்தரப்பிரதேசத்தில் தற்போது இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் தவித்து வருகின்றனர்.