வியாழன், 6 செப்டம்பர், 2018

இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை! September 6, 2018

LGBT எனப்படும் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தன்பாலின உறவு குற்றம் எனக்கூறும் 377வது சட்டப்பிரிவை ரத்து செய்தது.

இந்நிலையில், LGBT என்றால் என்ன? எந்தெந்த நாடுகளில் இத்கு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய சிறப்பு செய்தி...

LGBT என்றால் என்ன?

ஆணை விரும்பும் ஆண் (Gay), பெண்ணை விரும்பும் பெண் (Lesbian), இருபாலின உறவை விரும்புவோர் (Bisexual), திருநங்கைகள் (Transgender) ஆகியோர் LGBT என்று அழைக்கப்படுகிறார்கள். 1980களில் LGBT என்ற வார்த்தை அறிமுகமானது. அதற்கு முன் ஹோமோசெக்சுவல்ஸ் (Homosexuals) என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்தனர்.

இயற்கைக்கு மாறான பாலின இச்சை கொண்ட இவர்கள், தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை பொதுவெளியில் சொல்ல தயங்குவர். அதன் பிறகு, முதலில் 1950ம் ஆண்டில் சுய உதவி மற்றும் சுய ஏற்புக்காக ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடத்தொடங்கினர். பின்னர், 1960 மற்றும் 70களில் அவர்களுடைய உரிமைக்காக போராடத்தொடங்கினர். படிப்படியாக முன்னேறிய இவர்களது போராட்டம், 2000ம் ஆண்டில் திருமணத்திற்கான போராட்டம என முன்னேறியது. அதனடிப்படையில், உலகில் முதல்முறையாக 2000-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் தைவான் நாடு ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. 

ஓரினச்சேர்க்கைக்கான கொடியை, 1978ம் ஆண்டு ஓரினச்சேர்ர்க்கை ஆதரவாளர் Gilbert Baker என்பவர் அறிமுகப்படுத்தினார். வானவில் போன்று 8 வண்ணங்களுடன் முதன்முதலில் அவர்களுக்கான கொடி உருவாக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது, 6 நிறங்கள் மட்டுமே அந்த கொடியில் அச்சிடப்படுகிறது. ஒவ்வொரு நிறத்திற்கென்றும் தனி குறியீடுகளும் இருக்கிறது.

பிங்க் — பாலுறவு 
சிவப்பு — வாழ்க்கை
ஆரஞ்சு — மாற்றம்
மஞ்சள் — சூரிய ஒளி
பச்சை — பசுமை
நீலப்பச்சை — மந்திரம்
நீலம் — அமைதி
வயலெட் — மனநிலை

LGBT சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்:

தற்பொழுது இந்தியா, அர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரேன்ஸ், கெர்மனி, ஸ்பெய்ன், அமெரிக்கா உட்பட 27 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. 

Related Posts: