
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் மூலிகை செடிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத்தீ உருவாகியுள்ளது. இந்த தகவல் அறிந்து வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ வேகமாக பரவி வருவதால் பல ஏக்கர் மூலிகை செடியும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீயால் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் காட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.