புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரண்டு விஞ்ஞானிகளுக்கு 2018ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என 6 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படும் நிலையில், இந்தாண்டு இலக்கியப் பிரிவுக்கு மட்டும் தாமதமாக அறிவிக்கப்படும் என நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தககு ஹோன்ஜோ ஆகிய 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை கண்டறிந்ததற்காக இருவருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருக்கும் தலா 4 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.