திங்கள், 1 அக்டோபர், 2018

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது : திருநாவுக்கரசர்! October 1, 2018

Image

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியது குறித்து ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலை மாற்றி எழுத வாய்ப்புள்ளது என்றும், அஸ்திவாரமற்ற பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் கட்சியில்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்து பேச்சுநடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts: