வியாழன், 4 அக்டோபர், 2018

கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! October 4, 2018

Image

கனமழை எதிரொலியாக புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்ச தீவுப்பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடலின் தமிழக கடலோரப்பகுதியிலும் வழிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பெரும்பாலன இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. 

இதன் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை, சேலம், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக புதுச்சேரி மாவட்டத்திலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

சென்னையின் பல பகுதிகளில் காலை முதலே பரவலான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தியாகராய நகர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 

இதனிடையே, கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு -வரலாறு காணாத வௌ;ளப்பெருக்கு - சுற்றுலா பயனிகளுக்கு குளிக்க தடை

Related Posts: