
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படமாட்டாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகின்றன. இதனிடையே உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். சபரிமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கேரளா மற்றும் அண்டை மாநில பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.