
சென்னை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கா 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதனை கண்காணிக்கவும் சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று முதல் பணிகளை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கழிவுநீர் இயந்திரங்களின் செயல்பாடுகள் இணையதள இயக்கி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி தலைமையிடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.