உத்தரப்பிரதேசம் பாக்பாத் நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படை விமானம் ஒன்று 3 அதிகாரிகளுடன் விண்ணில் பறந்துகொண்டிருந்தது. அப்பொழுது திடீரென விமானம் நொறுங்கி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், விமானிகளை காப்பாற்றினர். உயிர்சேதம் ஏற்படாத பொழுதிலும் அங்கு நடந்த சிலரின் செயல்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் மீட்பு படையினர்.
நொறுங்கிய விமானம் முன்பு ஆர்வமாக பல இளைஞர்கள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இளைஞர்களின் செல்ஃபி மோகம் மிக மோசமான சூழ்நிலையிலும் எட்டிப்பார்க்கிறது என்பதை மீட்புக்குழு அதிகாரிகள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
விமான விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அதில் பயணித்த 3 பேருக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை எனவும் காவல்துரையினர் தெரிவித்தனர்.