புதன், 10 ஏப்ரல், 2019

91 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடக்கம்! April 10, 2019

source ns7.tv
Image
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  91 தொகுதிகளிலும் 1,266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில், ஆளுங்கட்சியான தெலுங்கு தேசமும், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தனித்து களம் காண்கின்றன. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.