புதன், 3 ஏப்ரல், 2019

தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தமிழக மாணவிகள் சாதனை! April 03, 2019

source ns7.tv
Image
தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தமிழக மாணவிகள் 2 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
சண்டிகர், பீகார், ஹரியானா, தெலங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூரில் நேற்று (02-04-19) நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் பங்குபெற்றனர்.  இதில், தமிழகம் சார்பில், திருநெல்வேலி மாவட்டம் தெட்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பங்குகொண்டனர்.
வலு தூக்குதலில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட மாணவிகள், பல்வேறு பிரிவுகளில் தங்கப்பதக்கங்களையும், வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளனர். 
ஜெ. ஜெனிஸ் இவாஞ்சலின் என்ற மாணவியும், ஜெ. ஜெஸிந்தா ஜெலின் என்ற மாணவியும் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். ஐ. பிருந்தா என்ற மாணவியும், ஜெ. மஜீலா மினோல்டா என்ற மாணவியும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளனர். 
பதக்கங்கள் வென்ற மாணவிகள்
கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வலுதூக்குதலுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த சாதனைப்பெண்கள், மேலும் பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்ப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர். 

Related Posts: