செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமெரிக்காவின் F-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தினோம் - பாகிஸ்தான் ஒப்புதல் April 02, 2019

Authors
Image
அமெரிக்க தயாரிப்பான F-16 ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியதை மறுத்து வந்த பாகிஸ்தான் தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளது.
44 சிஆர்பிஎஃப் வீரர்களை பலிவாங்கிய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியது.
இதன் பின்னர் இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதியன்று இந்திய எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தானிய விமானங்களை இந்திய வான்படையைச் சேர்ந்த துரத்திச் சென்றது.
MiG-21 ரக விமானத்தை ஓட்டிச் போது அதை பாகிஸ்தான் தரப்பு சுட்டுவீழ்த்தியதில் அதில் பயணித்த சென்னை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன F-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்தது. இந்த ரக விமானங்களை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமெரிக்கா இந்த விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்திருந்தது. இதனை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா ஆதாரங்களை அமெரிக்காவிடம் முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான், தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய விமானங்களை விரட்ட சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட  JF17 ரக விமானங்களுடன்,  F-16 விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பாதுகாப்பு என்று வரும்போது எந்த நடவடிக்கையும் எடுக்க உரிமையுள்ளது என்றும் பாகிஸ்தான் வான்ப்டை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

source ns7.tv