செவ்வாய், 2 ஏப்ரல், 2019

வெயில் தாக்கத்தில் இருந்து காக்க உதவும் புதினா மருத்துவம்..! April 02, 2019

source ns7.tv
Image
கோடை காலம் தொடங்கிவிட்டதன் எதிரொலியாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கத்தொடங்கிவிட்டது. வெயிலின் கடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் குளிர்ச்சித்தன்மை அதிகம் நிறைந்துள்ள புதினா கோடை கால வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்க உதவும்? அதில் அடங்கியுள்ள பிற மருத்துவ குணங்கள் என்ன?
எடை குறைய:
இயற்கையான வழியில் எடையை குறைக்க புதினா நமக்கு கைகொடுக்கிறது. சோடா மற்றும் பிற இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதற்கு பதிலாக சர்க்கரை கலக்காத புதினா தேனீரை எடுத்துக்கொள்ள தொடங்கினால் இயற்கையான முறையில் எடையை குறைக்கலாம். 
சருமத்திற்கு உகந்தது:
சருமத்தை சுத்தப்படுத்த புதினா இலை சாறு பெரிதும் உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படாமல் தடுப்பதுடன் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. மேலும் புதினா எண்ணெய்யில் உள்ள கிருமிநாசினிகள் முகப்பருவை குணமாக்குகிறது.
வாய் துர்நாற்றம்:
வாய் பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக போக்க புதினா உதவுகிறது. புதினா கலந்த சூயிங் கம் மற்றும் புதினா தேனீ பயன்படுத்தும் போது வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
சளித்தொல்லை நீங்கும்:
சளி மற்றும் குளிரால் ஏற்படும் மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புதினாவே அருமருந்தாகும். அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் மூக்கடைப்பை நீக்கி சிரமமின்றி சுவாசிக்க உதவுகிறது.
உணவு செரிமாணம்:
உணவு எடுக்கொண்ட பின்னர் புதினா எண்னெய்யை எடுத்துக்கொள்ளும் போது செரிமாணம் உள்ளிட்ட வயிற்று கோளாறுகளை அது சரிசெய்கிறது.
தாய்பால் தரும் வலி நீங்குகிறது:
தினமும் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பு பகுதிகளில் வலி அதிகரித்து காணப்படும். புதினா சாறை மார்பு பகுதியில் தடவிவந்தால் வலி நீங்கி தாய்ப்பால் கொடுப்பதை இலகுவாக்கும்.
மூளை செயல்பாட்டை ஊக்கப்படுத்தும்:
புதினா இலையை நுகர்வதன் மூலம் அதில் உள்வாங்கப்படும் நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
அதிக சத்துகள் நிறைந்தது:
புதினாவில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக கண்பார்வை மற்றும் இரவு பார்வை கோளாறை சரிசெய்யும் வைட்டமின் ஏ சக்தி புதினாவில் அதிகம் நிறைந்துள்ளது.