செவ்வாய், 5 மே, 2020

பாகிஸ்தான் விமானப்படையில் முதல்முறையாக ஒரு ‘ஹிந்து’ பைலட்!

credit ns7.tv
Image
ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் தனது விமானப்படையின் பைலட்டாக நியமித்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பெரிய மாவட்டமானது தர்பார்கர், இது ஹிந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. உணவு, தண்ணீர் பிரச்சனை நிலவும் மிகவும் பிந்தங்கிய இப்பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் தேவ், இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்.
தற்போது ராகுல் தேவ், பாகிஸ்தான் விமானப்படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக விளங்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் விமானப்படையின் விமானியாவது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உட்பட பல சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர் ஒருவர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பாகிஸ்தானிய ஹிந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறுகையில், ராகுல் தேவின் நியமனம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ராணுவம், மருத்துவம், குடிமைப்பணி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் இது போன்று சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்தத்தொடங்கினால் வரும் நாட்களில் பல ராகுல் தேவ்கள் நாட்டுக்காக சேவை புரிய தொடங்குவர் என அவர் தெரிவித்தார்.

Related Posts:

  • வெற்றிலைக்கு வெரிகுட் வயிறார உணவருந்திய பின் வெற்றிலை பாக்கு போட்டால்தான் விருந்தே திருப்திகரமாக முடிந்த உணர்வு பலருக்கும் இருக்கும்.  தாத்தாக்களும் பாட்டிக… Read More
  • எது தேசதுரோகம்? பேராசிரியர் சாந்தி உரை! எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் … Read More
  • தினை உடலுக்கு பலத்தை தரும் தினை தினை தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்து வரும் சிறு தானியமாகும். இதை ஆங்கிலத்தில் பாக்ஸ்டெயில் மில்லட் என்று அழைப்பார… Read More
  • சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை! சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘காக்கிச்சட்டை’ படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் சிவப்பு சந்தை – அதாவது, ‘ரெட் மார்க்கெட்’ என்… Read More
  • உயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு? முளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, … Read More