சனி, 8 செப்டம்பர், 2018

26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள் மூடப்பட்டன! September 8, 2018

Image

கேரள மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள் 29 நாள்களுக்குப் பின் நேற்று மூடப்பட்டன. 

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரள மாநிலத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக முழு கொள்ளளவை எட்டியதால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பலத்த சேதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் கேரளாவில் மழை நின்றதால், அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து இடுக்கி அணையில் உள்ள செருதோணி மதகுகள் நேற்று மூடப்பட்டன. தற்போது அணையின் நீர்மட்டம் 2,390.98 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: