
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும், என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை கண்டித்து, வரும் 18-ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தாமதிக்காமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்க வேண்டும் உள்பட கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் கூறினார்.