
ஓரினச்சேர்க்கை குற்றம் என அறிவிக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்குகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377-ன் படி இயற்கை நியதிக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377-ஐ ரத்து செய்து, கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, ஓரினசேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.
இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது