
விவசாயிகளின் நலனை மத்திய அரசு காக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஜன்தர் மந்தரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.