செவ்வாய், 4 செப்டம்பர், 2018

மீன் விற்றதால் விமர்சிக்கப்பட்ட கல்லூரி மாணவி, சாலை விபத்தில் படுகாயம்! September 4, 2018

Image

கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மீன் விற்றதற்காக விமர்சிக்கப்பட்ட கல்லூரி மாணவி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஹனன் ஹமீத். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தின் வறுமையை போக்க மீன் விற்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இவரை பாராட்டிய நிலையில், பிரபலமடைவதற்காக இவ்வாறு இந்த மாணவி செய்வதாக பலர் விமர்சித்தனர்.

மேலும், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக சினிமா இயக்குனர்கள் பலர் முன்வந்தனர். தற்பொழுது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் இவர், நேற்று கடைதிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தபொழுது, ஹனன் பயணித்த கார் கொடுங்கலூர் சாலையில் ஒரு மின்கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த ஹனன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹனன். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Related Posts:

  • அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு. இந்து என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு. அர்த்தம் தெரியாமலே தான் இந்து வை வச்சி அரசியல் பன்றிங்களாடா... அட மானங்கெட்டவிங்களா… Read More
  • Quran அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! அல்குர்ஆன் 47:19 … Read More
  • அவரைக்காயின் மருத்துவ பலன்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்ட அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் சக்தி கொண்டது.இதில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன, பித்தத்தினால் உ… Read More
  • யார் இந்த பீட்டா? PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. … Read More
  • திருச்சி விமான நிலையம் திருடர்களின் கூடாரமா ? மனக்குமுறளுடன் ஒரு பதிவு... திருச்சி விமான நிலையம் திருடர்களின் கூடாரமா ? கடத்தல் செய்பவர்களை காசு வாங்கி கொண்டு அனுப்பும் இவர்கள் பிழைப்புக்… Read More