தற்போது விற்பனையிலுள்ள ஸ்மார்ட் போன்களிலேயே அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய போன்கள் பற்றிய தகவல்களை ஜெர்மனியை சேர்ந்த கதிர்வீச்சு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிக கதிர்வீச்சு வெளியேற்றக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் தயாரிக்கப்படும் சியாமி எம் ஐ ஏ1 (xiaomi mi a1) என ஆய்வு முடிவு கூறுகிறது.
சீனாவில் தயாரிக்கப்படும் ஒன் பிளஸ் 5டி (One Plus 5T) மொபைல் அதிக கதிர்வீச்சை வெளியேற்றுகிறது.
ஒன் பிளஸ் 5டி போனுக்கு பிறகு அடுத்த 5 இடங்களிலும் சீனாவில் தயாரிக்கப்படும் வாவ் வே (huawei) மொபைலின் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
எட்டாவது இடத்தில் ஒன் பிளஸ் 5 (One Plus 5) மொபைலும், ஒன்பதாவது இடத்தில் வாவ் வே P9 (huawei p9) மொபைலும் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் கம்பெனி தயாரிக்கும் ஐ போன் 7 கதிர்வீச்சு வெளியேற்றும் மொபைல்போன்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது
ஆபத்துக்குரிய கதிர்வீச்சை வெளியேற்றும் முதல் 15 மொபைல்களில் 12 சீனாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.