
சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆலோசனை நடத்தினார். நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு, ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாவட்டத்தில் ஐந்தாயிரம் ஆக்ரமிப்புகள் நீர்நிலை பகுதிகளில் உள்ளது என்றும், கடந்த சில மாதங்களில் இரண்டாயிரம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன எனவும் பேட்டியளித்தார்.