வெள்ளி, 7 செப்டம்பர், 2018

குட்கா விவகாரத்தில் ஏதோ நிகழ்ந்திருப்பது உண்மைதான் - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் September 7, 2018

Image

ட்கா ஊழல் நடைபெற்றது உண்மையே எனவும், டிஜிபியாக தாம் பதவியேற்பதை தடுக்கும் வகையில் ஊழல் குற்றம்சாட்டு எழுப்பப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறையின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, குட்கா ஊழல் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், அவரது பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் உட்பட 5 பேரையும் கைது செய்து சிபிஐ போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ், சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் குட்கா வழக்கு குறித்து வெளிப்படையாக பேச முடியாது என தெரிவித்தார். மேலும் 33 ஆண்டு கால பணியில் தான் எந்த தவறும் இழைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் ,

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் கூறினார். குட்கா வழக்கில் அடிப்படை ஆதாரமின்றி தம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆணையராக இருந்த போது லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது தவறான தகவல் எனவும் விளக்கம் அளித்தார். லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்ட காலத்தில் தாம்ஆணையராக இல்லை எனவும், திமுக தொடர்ந்த வழக்கிலும் தனது பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Related Posts: