
பெட்ரோலிய பொருட்கள் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயை தாண்டியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் நேற்று 82 ரூபாய் 62 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையான நிலையில், இன்று 83 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாய் 17 காசுகளுக்கு விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்ற அளவிற்கு ஐயம் கொண்டுள்ளனர்.