ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, காங்கிரஸ் கட்சி கள நிலவரத்தை புரிந்துக் கொள்ளாமல் அடாவடியாக நடந்துக் கொள்வதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியை அழித்தொழிக்க பார்ப்பதாக புகார் தெரிவித்த மாயாவதி, திக்விஜய் சிங் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை என்றும், அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றைக் கண்டு அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
திக் விஜய் சிங் மத்தியில் ஆளும் பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய மாயாவதி, காங்கிரஸ் உடன் தங்கள் கட்சி கூட்டு வைக்க விரும்பவில்லை என திக் விஜய்சிங் கூறுவது ஆதாரமற்றது என்றும் தெரிவித்தார். சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைக்க உளப்பூர்வமாக விரும்புவதாகவும், ஆனால் அக்கட்சியின் சில தலைவர்கள் கூட்டணிக்கு எதிராக சதி செய்வதாகவும் மாயாவதி தெரிவித்தார்.
இதனை அடுத்து, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்காமல், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி இடவுள்ளதாகவும் மாயாவதி தெரிவித்தார்.