சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருந்தம் பட்டு கண்மாயில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஒன்றில் பழங்கால எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், மாணவர் அரவிந்தன் ஆகியோர் சென்று கள ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் கல்வெட்டில் இருந்து பல தகவல்கள் தெரியவந்ததாகவும், இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயம் கல்வெட்டு என்றும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.