பணிக்கு சேர்பவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த பின்புலத்தை இணையம் மூலம் அறிந்து கொள்ளும் புதிய சேவையை தமிழக காவல்துறை தொடங்கியுள்ளது.
டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :
► ஒருவரின் பின்புலம் குறித்த தகவலை இணையம் வாயிலாக எளிமையாக பெற முடியும்.
► தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்த சேவையை பெற காவல் நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை
► www.eservices.tnpolice.gov.in என்கிற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து, சுய பின்புலம் பரிசோதனை, வேலைவாய்ப்பு பின்புல தகவலை பெற முடியும்.
► இதன் மூலம் சம்பத்தப்பட்ட நபர் குறித்த பின்புலம், குற்றப் பின்னணி உள்ளிட்டவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
► தனிநபர் 500 ரூபாய் கட்டணமும், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் 1000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
► இந்த தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமும் செலுத்த முடியும்.
► காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் தலைமையிலான குழு கண்காணிக்கும்
► விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் விவரங்களை அந்த குழு அளிக்கும்
► இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
► அதிகாரிகள் உரிய தகவல் அளிக்க தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியும்.