ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளையில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குடியேற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளையின் தம்ளார்மூக்கு, வெள்ளத்திரடு, மேகமுடைய சாஸ்தா கோயில் திரடு உள்ளிட்ட பகுதிகளில் கற்கால குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் இடைக்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், கற்கருவிகள் அதிகளவில் உள்ளன. எனவே இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அகழாய்வு நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source: NS7.tv