சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தைகளின் படங்கள் பதிவாகியுள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இவ்வனப்பகுதியில், 6 மாதங்களுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன்பு, மழைக்காலத்திற்கு பின்பு என, 2 முறை வனவிலங்குகள், கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாகவும், வனவிலங்குகள் கணெக்கெடுப்பு பணிக்கு உதவியாக இருக்கவும், வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில், தாளவாடி வனகோட்டதிற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறையினரின் கண்காணிப்பு கேமிராக்களில் சிறுத்தையின் அறிய புகைப்படங்கள் பதிவாகியுள்ளனர்.
வனப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் சிறுத்தைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகள் மிரட்டலாக இருந்தாலும் ரசிக்கும் படியாகவும் அமைந்துள்ளது.
தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினார் தெரிவித்துள்ளனர்.
source: ns7.tv