5 ஆண்டு கால ஆட்சியில், உலக நாடுகளை சுற்றிவிட்டு, தேர்தலுக்காக மாதம் மூன்று முறை, பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொருரின் வங்கி கணக்கிலும், 15 லட்சம் போடுவேன் என்று சொல்லி, அனைவரையும் ஏமாற்றிய மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சி, என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார் உதயநிதி ஸ்டாலின். ஓசூர் அடுத்த சூளகிரியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், வேலூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசுகையில், பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புனிதநூல் என்று கூறிய பிரதமர் மோடி, 5 ஆண்டு கால ஆட்சியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தான், ஆட்சி செய்தார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்
source ns7.tv