ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அகஸ்தா வெஸ்ட்லேன் ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னரே, அதன் நகல் ஊடகங்களுக்கு கசிந்து விட்டதாக கூறி, கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
source ns7.tv