திங்கள், 10 செப்டம்பர், 2018

10 ஆண்டுகளுக்கு பின்னர் விரைவில் நீராவி இஞ்சினுடன் மலை ரயில் இயக்கம்! September 10, 2018

Image\\
குன்னூரில் 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நிலக்கரி கொண்டு வரப்பட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய மலை ரயில் இயக்க முடிவு.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் 1918ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி இன்ஜின் வரவழைக்கப்பட்டு இங்கு இயக்கப்பட்டு வந்தது. 

அன்மையில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையால் நீராவி இன்ஜினை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு படிப்படியாக நிறுத்தப்பட்டது. ஃபர்னஸ் ஆயில் மற்றும் டீசல் இன்ஜின் பயன்பாட்டிலேயே மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு நீங்கியதால் 2 நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்மலையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக குன்னூருக்கு இயக்குவதற்காக மலை ரயில் எடுத்து வரப்பட்டது. 

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நீராவி இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்க இன்று முதற்கட்ட நடவடிக்கையாக நிலக்கரி குன்னூருக்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலக்கரியை வைத்து மலை ரயிலை சோதனையோட்டம் விட்ட பிறகு சுற்றுலா பயணிகளுக்காக விரைவில் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. 

மீண்டும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய மலை ரயிலை நீராவி இஞ்சின் கொண்டு இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.