திங்கள், 10 செப்டம்பர், 2018

ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்! September 10, 2018ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்! September 10, 2018

சென்னையை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், ஸ்கேட்டிங்கில் 1.85 வினாடியில் சாதனை செய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். 

தாம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் நவின்குமார் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டின் மீது தீரா ஆர்வம் கொண்டுள்ள நவின், முறையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், லிம்போ ஸ்கேட்டிங் பிரிவில் 10 மீட்டர் தொலைவை, 9.5 இன்ச் உயரத்தில் தரையை தொடாமல் 1.85 வினாடியில் கடந்து சாதனை படைத்தார். ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts: