
திருநெல்வேலியில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு, கடத்தப்பட்ட பழமையான 30 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ளதை, ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், கடந்த 1982-ஆம் ஆண்டு 600 ஆண்டுகள் தொன்மையான நடராஜர் சிலை உள்ளிட்ட 4 சிலைகள் திருடுபோனது.
இதுகுறித்து விசாரணை நடத்தி சிலைகளை கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு அத்துடன் முடித்து வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தற்போது மீண்டும் விசாரணை நடத்திய ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், அந்த சிலைகள், ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
சிலை கடத்திய நபர்களின் தகவல்களும் கிடைத்துள்ளதால், இதுதொடர்பான விசாரணைக்கு வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு, மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குலசேகரமுடையார் கோயிலில் உள்ள சிலைகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுமென தெரிவித்துள்ள ஐ.ஜி பொன்மாணிக்கவேல், ஆஸ்திரேலியாவில் உள்ள சிலைகள் இந்தியாவுக்கு கொண்டுவர, நடவடிக்கை எ