திங்கள், 10 செப்டம்பர், 2018

நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படுமா? September 10, 2018

Image


நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற, மத்திய அரசுக்கு, நிதி ஆயோக் பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது. 

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, மின்சார வாகனங்களை தயாரிக்க முன்னுரிமை தரவேண்டும் என்று நிதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 17 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள நிலையில், ஒரு வாகனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுவதாகவும், இதனால், இந்தியாவில் ஆண்டுக்கு 3,400 கோடி லிட்டர் பெட்ரோல் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களை மின்சாரத்திற்கு மாற்றினால் ஆண்டுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகவும் என்றும், இந்த திட்டத்தை கொண்டு வந்தால், அடுத்த 7 ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்ற முடியும் என்றும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.