வியாழன், 6 செப்டம்பர், 2018

இறுதி கட்டத்தை எட்டியுள்ள திருச்சி முக்கொம்பு அணை சீரமைப்பு பணிகள்! September 6, 2018

Image

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்ததை தொடர்ந்து, தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று 4வது நாளாக சீரமைப்பு பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்காலிக பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும், வியாழன் இரவு முதல் காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக திறந்துவிடப்படும் எனவும் கூறினார். 

Related Posts: