
பாரம்பரிய மரங்களை வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் இருநாபட்டு ஏரியில், இரண்டாயிரம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சி, நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு, இருநாபட்டு ஏரிக்கரையில் பனை விதைகளை விதைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுமண தம்பதியும் கலந்து கொண்டு, பனை விதைகளை விதைத்து மகிழ்ந்தனர். பாரம்பரிய மரங்களை வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும், என நடிகர் மன்சூர் அலிகான் அப்போது கேட்டுக்கொண்டார்.