
தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைப்பது தொடர்பாக அமைச்சரவை பரிந்துரையை அம்மாநில ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெலுங்கானா சட்டசபையை கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அமைச்சரவை முடிவு எடுத்தது. அமைச்சரவையின் பரிந்துரையை, அம்மாநில ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் அளித்தார். இதனை, ஏற்றுக் கொண்ட ஆளுநர், தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்திரசேகர ராவை இடைக்கால முதல்வராக பதவி வகிக்கவும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக் காலம் 2019ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடைய உள்ள நிலையில் வரும் டிசம்பரிலேயே சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக, தனது அரசை சந்திரசேகர ராவ் கலைத்துள்ளார்.