சனி, 8 செப்டம்பர், 2018

​நேரடி கொள்முதல் நிலையங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு! September 8, 2018

Image


தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நடப்பு குறுவை பருவ காலகட்டத்துக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே, நேரடி நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதற்கிடையே டெல்டா மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து அறுவடை செய்யப்படும் நெல்லை, கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்க, கால அவகாசத்தை நீட்டிக்க செய்யுமாறு மத்திய பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதனை ஏற்று, நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள், வரும் 30ம் தேதி வரை செயல்பட கால அவகாசம் நீட்டித்து, மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வரும் 30ம் தேதி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை பயன்படுத்தி, தங்களது நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகளை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Posts: