வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நீர், நிலைகளை ஆக்கிரமித்து வீடுகட்டுபவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் September 6, 2018

Image

நீர், நிலைகளை ஆக்கிரமித்து வீடுகட்டுபவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

சென்னை அயனாவரத்தில் குளத்தை ஆக்கிமிரத்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என தீர்ப்பளித்த நீதிபதி, அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார். நீர்நிலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறிய நீதிபதி, இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.  

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts: