வெள்ளி, 7 செப்டம்பர், 2018

டீ கடையில் வேலை செய்யும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்! September 7, 2018

டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் தனது தந்தை நடத்திவரும் டீக்கடையில் அவருக்கு உதவியாக இருந்துகொண்டே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் இடம்பெற்றிருந்தார். ஹரிஷ்குமாரின் தந்தை டீக்கடை நடத்திவரும் நிலையில், பயிற்சிக்கு இடையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தனது தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். 

ஹரிஷ்குமாரின் கடின உழைப்பிற்கு தொடர்ந்து வெற்றிகள் கிட்டும் என பலரும் வாழ்த்திவருகின்றனர்.

Related Posts: