வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி! September 7, 2018

Image

மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி, அந்த கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலாதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி விசாரணையில் உள்ள இந்த வழக்கில் முதற்கட்ட குற்றப் பத்திரிக்கை கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், 2ம் கட்ட குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் நீதிமன்றத்தில் டி.எஸ்பி கருப்பையா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி முன்பு தாக்கல் செய்தார். 200 பக்கங்கள் கொண்ட 2வது கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

Related Posts: