வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி டிராக்டர் விரைவில் அறிமுகம்! September 7, 2018

Image

பல ஆண்டுகளாக டிரைவர் இல்லாத கார் குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம், வெளிநாடுகளில் அதுபோன்ற கார்களின் சோதனை ஓட்டமும், தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடந்துவரும் சூழலில் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் டிராக்டர்கள் இந்தியாவிற்கு வரவுள்ளன.

விவசாய இயந்திரங்கள், பன்னை உபகரனங்கள் மற்றும் பொறியியல் சாதனங்கள் தயாரிப்பில் முன்னோடியான ஹரியானாவைச் சேர்ந்த Escorts நிறுவனம் இந்தியாவின் முதல் தானியங்கி டிராக்டர் கான்செப்டை அறிமுகம் செய்துள்ளது.

துல்லியமான அடிப்படையிலான விவசாயத்திற்கு கைகொடுக்கும் வகையில் தானியங்கி விவசாய உபகரனங்களை தயாரிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த டிரைவர் இல்லாத டிராக்டரை Escorts நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப ஜாம்பவன்களான மைக்ரோசாஃப்ட், ரிலையன்ஸ் ஜியோ, Trimble, சம்வர்தனா மதர்சன் குரூப், Wabco, Bosch மற்றும் AVL ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியில் இந்த தானியங்கி டிராக்டரை Escorts நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான விவசாய நுண்ணறிவு, சிறந்த சாகுபடிக்கான மண்ணின்தன்மை, விதைகள், நீர் மேலாண்மை குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு தொழில்நுட்ப முறைகளையும், டிஜிட்டல் தளத்தையும் ஒருங்கினைத்து தருவதற்காகவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவிக்கும் escort, இதன் மூலம் சிறந்த சாகுபடியையும், வருவாயையும் தரமுடியும் என கூறுகிறது.

இந்த கூட்டணியின் வாயிலாக எலக்ட்ரிக் டிரைவ்லைன் தொழில்நுட்பத்தை AVL நிறுவனத்திடமிருந்தும், சென்சார்கள், கண்ட்ரோல்கள், நீர் அளவு மேலான்மை சிஸ்டம் மற்றும் தானியங்கி ஸ்டீரிங் தொழில்நுட்பத்தை trimble நிறுவனத்திடமிருந்தும், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் வாகனத்திற்கான கட்டுப்பாட்டு அமைப்பு தொழில்நுட்பத்தை WABCO நிறுவனத்திடமிருந்தும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்தும், நெர்வொர்க் தொழில்நுட்பத்தை ஜியோ நிறுவனத்திடமிருந்தும், எதிர்கால புகை உமிழ்வு தொழில்நுட்பத்தை BOSCH நிறுவனத்திடமிருந்தும் பெற்று இந்த தானியங்கி டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ESCORTS நிறுவனத்தின்

Related Posts: