வெள்ளி, 7 செப்டம்பர், 2018

காங்கிரஸ் நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு! September 7, 2018

Image


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10ந்தேதி நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய பா.ஜ.க. ஆட்சியில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி- எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான இலாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு,பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.  லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை வேகமாக நெருங்கி வருவது மிகுந்த கவலையளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிக்கவிடாமல் பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் எதிரொலியாகவே பெட்ரோல், டீசல் விலை தற்போது கடுமையாக அதிகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் கூறியுள்ளார். 

10ந்தேதி காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் வெற்றி அடையும் வகையில் திமுக அந்த போராட்டத்தில் பங்கேற்கும்  என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம்  மூலம் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Related Posts: