
நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை எனவும், இடம் மாறுதலே நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளை தடுப்பதாக உள்ளது, என கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக மாநில ஐ.ஜி.ரூபா பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக அரசிடமும், அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும், என தெரிவித்தார். அப்போது தான் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்ட அவர், சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு உள்ளது எனவும், ஆனால் நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை எனவும் குறிப்பிட்டார்.