வெள்ளி, 5 அக்டோபர், 2018

இரண்டு நாட்களில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்வு! October 5, 2018

Image

கேரளாவில்  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக முல்லை பெரியாறு அணை, இரண்டு நாட்களில் 127 அடியிலிருந்து 4அடியாக  உயர்ந்து தற்போது, 131.30 அடியாக உள்ளது.

அணை நீர் மட்டம் விரைவில் 142 அடியை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் முதல் போக பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் ஆயிரத்து 700 கனஅடியிலிருந்து தற்போது 6 ஆயிரத்து 670 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு நீர் வரத்து கடுமையாக அதிகரித்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.