வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழகத்தில் ரெட் அலர்ட்; பொதுமக்களுக்கு உச்சநிலை முன்னெச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்! October 4, 2018

Image

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதிதீவிர கனமழைக்கான உச்சநிலை  முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

அதிதீவிர மழையால், தமிழகத்தில், 25 சென்டி மீட்டருக்கு மேல் கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார். மழையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்கவும் வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.   அதி தீவிர கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், தேவைப்பட்டால் பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் ஆயிரத்து 275 பேருக்கு பேரிடர் கால பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ரெட் அலர்ட் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலிடம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டறிந்தார். 

Related Posts: